• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வறட்சியால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவிப்பு

வறட்சியால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 03 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 39,000 பேர் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரிதும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share the Post: