• Home
  • உள்ளூர் செய்திகள்
  • சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்.

vadivel shagthivel

அண்மைக்காலமாக நாங்கள் அவதானிக்க கூடிய விடயம் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பார்க்க முடிகின்றது. தீய சக்திகள் மதங்களைக் காயப்படுத்தி அதனை பெரிய பூதாகரமாக்கி அதிக அளவு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இதற்கு எக்காலத்திலும் அனுமதியளிக்கா வண்ணம் அரசாங்கம் சட்டத்தை இயற்ற வேண்டும்

என களுவாஞ்சிகுடி  வர்த்தகசமூக நலம்புரிச் சங்கத்தின் மனோரஞ்சிதராஜா ரமணன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை(22.09.2026) களுவாஞ்சிசிகுடி பொதுச் சந்தை முன்னால் ஒன்றுகூடிய களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத்தினர் அனோஜனின் விடுதலை தொலைபில் கருத்துத் தெரிவித்தனர். இதன:போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர ;இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

எங்களது சகோதரர் அனோஜன் என்பவர் சவுதியில் தண்டனைக்கு உள்ளாகி இருக்கின்றார். சமூக ஊடகம் வாயிலாக கருத்தை முன்வைத்து அது ஒரு மதத்தை இழிவு படுத்தியதாக கருதப்பட்டு அந்த குற்றம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அவர் மரண தண்டனையை பெற்றிருப்பதாக நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இலங்கை அரசாங்கம் அது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுத்து அவரை எனது நாட்டிற்கு மீள பெறுவதற்கான செயல்பாடுகளை செய்வதாக அறிகின்றோம்.

எனது மக்கள் சார்பில் நாங்கள் கூறிக் கொள்வது இலங்கை எனும் நாட்டில் எந்தவித இன மத முரண்பாடுகளுமான கருத்துக்களை எவரும் தயவு செய்து முன்வைக்க வேண்டாம். இதற்கான காரணம் எமது முதற்கடவுள் சிவபெருமான், சிவலிங்கத்தை மிகவும் இழிவாக சமூக வலைத்தளத்தில் சித்தரித்து எழுதிய வசனத்திற்கு அனோஜன் என்பவர் தனது கருத்தை பதிலீடாக எழுதியதை தொட்டி மிகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன இவை இரண்டுமே மிகவும் தவறான விடயங்களாகும்.

இது இன மதங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். இதனை உதாரணமாக எடுத்துக் கொண்டு எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ நல்ல விடயங்களை முன்கொண்டு செல்வதற்காகதான் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வைத்துக் கொண்டு மதங்கள் இனங்களுக்கு இடையே முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து முறுகல்நிலையை ஏற்படுத்தக்கூடாது.

அண்மைக்காலமாக நாங்கள் அவதானிக்க கூடிய விடயம் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பார்க்க முடிகின்றது. தீய சக்திகள் மதங்களைக் காயப்படுத்தி அதனை பெரிய பூதாகரமாக்கி அதிக அளவு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இதற்கு எக்காலத்திலும் அனுமதியளிக்கா வண்ணம் அரசாங்கம் சட்டத்தை இயற்ற வேண்டும்

மேலும் சவுதி அரசாங்கம் அனோஜனின் விடுதலை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை நாம் களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கம் சார்பிலும் முச்சக்கர வண்டி சாரதிகள் சார்பிலும் பிரதேச மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுகின்றோம். என கருத்துத் தெரிவித்த அவர்

எமது பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிதி நிறுவனங்களில் வருகை அதிகரித்துள்ளன. இதனால் மக்களின் பணம் நேரடியாகவே சுரண்டப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். இவ்வாறு நிதி நிறுவனங்களில் பாதிப்புற்ற மக்கள் எமது வர்த்தக சங்கத்திடமும் முறைப்பாடு செய்துள்ளார்கள். களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் 1500000 ரூபா வை வைப்பிலிட்ட ஒருவர் அப்பணத்தை உரிய காலம் முடிவுற்றதும் மீளப் பெறுவதற்குச் சென்றவேளை மேலும் 3 மாதங்களுக்கு இங்கே வைப்பிலே வையுங்கள் 3 மாதங்கள் கழிந்த பின்னர் அப்பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு சென்று நாம் தரும் காசோலையை மாற்றி பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என குறித்த நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே பயனாளியும் அவர்களிடமிருந்து காசோலையைப் பெற்று விட்டு 3 மாதங்கள் கழிந்த பின்னர் உரிய அரச வங்கிக்குச் சென்று காசோலையை மாற்ற முற்பட்டபோது அது செல்லுபடியற்ற காசோலை என தெரிய வந்துள்ளது. இது ஒரு சம்பவமே இவ்வாறு இன்னும் பல சம்பவங்கள் எமது பகுதியில் நடைபெறுகின்றன. இது தொடர்பில் அசரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Share the Post: