• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கண்டியில் வீதியில் மரம் முறிந்து விழுந்து விபத்து: இரண்டு வாகனங்கள் சேதம், இருவர் காயம்!

கண்டியில் வீதியில் மரம் முறிந்து விழுந்து விபத்து: இரண்டு வாகனங்கள் சேதம், இருவர் காயம்!

கண்டி புகையிரத நிலையம் மற்றும் போகம்பரை பேருந்து நிலையப் பகுதிக்கு அருகில் திடீரென பாரிய மரமொன்று முறிந்து வீதியில் சரிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

திடீரென வீதியின் குறுக்கே மரம் சரிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் பாரிய சேதத்திற்குள்ளாகின.

இவ்விபத்தின் போது வாகனங்களில் பயணித்த இருவர் லேசான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மரம் முறிந்து வீதியை மறித்து விழுந்தமையினால் அப்பகுதியில் சில மணிநேரம் கடுமையான போக்குவரத்துப் நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Share the Post: