• Home
  • உள்ளூர் செய்திகள்
  • எயார்பஸ் பணச்சலவை வழக்கு: நாமல் ராஜபக்ஷ இன்று மீண்டும் கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்!

எயார்பஸ் பணச்சலவை வழக்கு: நாமல் ராஜபக்ஷ இன்று மீண்டும் கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சிறைச்சாலை அதிகாரிகளினால் அவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மீதான கட்டளையை நீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வேண்டி அம்பாரை மாவட்ட அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம் மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் கோரிக்கை

உள்ளூர் செய்திகள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்.