இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவாக, 2027ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தினசரி நேர அட்டவணையில் மாற்றங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மாணவர்களின் கற்றல் முறையை நவீனமயப்படுத்துவதையும், பாடத்திட்டங்களை மிகவும் திறம்பட முன்னெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே பாடசாலை நேர அட்டவணையில் இம்மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
Views: 20




