முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சித் திட்ட விழிப்புணர்வுப் பேரணி நேற்று சனிக்கிழமை (23) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வு தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு நடைபவனி
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை முன்னிட்டு இளைஞர் பேரணி மற்றும் நடைபவனி
மங்களராமய விகாரையில் இருந்து காந்தி பூங்கா வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம் எனும் கருப்பொருள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
மட்டக்களப்பு மாநகர நகரபிதா சிவம் பாக்கியநாதன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஆலிதீன் கமீர்,மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான மா.சசிக்குமார், எஸ். தயாசீலன், திருமதி சதீஸ்வரி, புதுக்குடியிருப்பு இளைஞர் சேவைகள் மன்றப் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி குகதாஸ், மாவட்ட தகவல் உத்தியோகத்தர் றம்சி எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டு காந்தி பூங்காவில் விழிப்புணர்வு வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலுமிருந்து 300 இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்தனர்







