மக்காஹுல் முாய்ஸமா: இலங்கையின் பிரபல தொழிலதிபரும் கலாநிதியுமான அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி (மள்வானை) அவர்களின் புதல்வர் அல்-ஹாபிழ் முஹம்மத் பாசில் ஜிப்ரி அவர்களின் புனித நிகாஹ் மஜ்லிஸ் (திருமண ஒப்பந்த நிகழ்வு), புனித பூமியான மக்கா மாநகரில் மிக விமர்சையாகவும் கண்ணியமிக்க வகையிலும் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வு, புனித கஃபத்துல்லாஹ்வின் நிழலில் அமைந்த அருள்மிக்க சூழலில் சிறப்புடன் அரங்கேறியது.

சவூதி அரச அதிகாரிகள் மற்றும் கஃபாவின் இமாம் பங்கேற்பு:சவூதி அரேபிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில், அவர்களின் நேரடிப் பங்கேற்புடன் அரேபிய கலாச்சார முறைமைகளையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த திருமண விழா மிக விசேடமாக அமைக்கப்பட்டிருந்தது. புனித மக்கா மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் அவர்கள் இந்த புனித நிகாஹ் வைபவத்தை முன்னின்று நடத்தி வைத்து, மணமக்களுக்காகப் பிரார்த்தித்தார்.
உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகள் வருகை: இலங்கையர் ஒருவரின் நிகாஹ் மஜ்லிஸ் புனித மக்கா மாநகரில் சவூதி கலாச்சார மரியாதைகளுடன் இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்றமையானது, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உலக நாடுகளின் பல உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் சர்வதேச விசேட அதிதிகள் பலர் வருகை தந்து சிறப்பித்தனர்.

இலங்கையிலிருந்து கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்: இலங்கையிலிருந்தும் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் நேரில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உட்பட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்குத் தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
புனித பூமியில், சர்வதேச பிரமுகர்கள் மற்றும் சவூதி அரச மரியாதைகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்த பெருமையாகவும், உலகளாவிய ரீதியில் பலரதும் பாராட்டைப் பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.






