October 21, 2026

ஊடகத் துறைக்கான கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதுக்கு இளம் ஊடகர் ஹஸ்பர் தெரிவு

A.H.HASFAR HASFAR கிழக்கு மாகாண பண்பட்டாலுவல்கள் திணைக்களத்தின் 2026ம் ஆண்டுக்கான ஊடகத் துறையில் இளங்கலைஞர் விருதுக்காக இளம் ஊடகவியலாளர் ஏ.எச்.ஹஸ்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிண்ணியாவை பிறப்பிடமாகவும் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவை வசிப்படமாகவும் கொண்ட இவர் 2013ல் ஊடகத் துறைக்குள் நுழைந்தார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிராந்திய செய்தியாளராக நியமனம் பெற்று தற்போது அச்சு, இலத்திரனியல் ஊடகத் துறையில் (சுயாதீன ஊடக வலையமைப்பு,தினகரன்,தினக்குரல்,தமிழன்) மற்றும் டிஜிட்டல் செய்தி துறையிலும் சுதந்திர ஊடகவியலாளராக தற்போது வரை பணியாற்றி வருகிறார் .

ஊடகத் துறைக்கான கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதுக்கு இளம் ஊடகர் ஹஸ்பர் தெரிவு Read More »

புனித மக்கா மாநகரில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகாஹ் மஜ்லிஸ்!

மக்காஹுல் முாய்ஸமா: இலங்கையின் பிரபல தொழிலதிபரும் கலாநிதியுமான அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி (மள்வானை) அவர்களின் புதல்வர் அல்-ஹாபிழ் முஹம்மத் பாசில் ஜிப்ரி அவர்களின் புனித நிகாஹ் மஜ்லிஸ் (திருமண ஒப்பந்த நிகழ்வு), புனித பூமியான மக்கா மாநகரில் மிக விமர்சையாகவும் கண்ணியமிக்க வகையிலும் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வு, புனித கஃபத்துல்லாஹ்வின் நிழலில் அமைந்த அருள்மிக்க சூழலில் சிறப்புடன் அரங்கேறியது. சவூதி அரச அதிகாரிகள் மற்றும் கஃபாவின் இமாம் பங்கேற்பு:சவூதி

புனித மக்கா மாநகரில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகாஹ் மஜ்லிஸ்! Read More »

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்கக் கேள்வி கோரல் அறிவித்தல்

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை 01.01.2027 தொடக்கம் 31.12.2027 வரையான ஒரு வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு விடுவதற்காகத் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கேள்விகள்  கோரப்பட்டுள்ளன. குத்தகைக்கு விடப்படும் முக்கிய நிலையங்கள்:மாட்டிறைச்சிக் கடைகள்:12ஆம் கிராமம் மாட்டிறைச்சிக் கடைசொறிக்கல்முனை மாட்டிறைச்சிக் கடை (தௌஹீத் பள்ளி)சவளக்கடை மாட்டிறைச்சிக் கடை (பிலால் ஜும்ஆ பள்ளி)மத்திய முகாம் மாட்டிறைச்சிக் கடை (சந்தைப் பகுதி) பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள்

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்கக் கேள்வி கோரல் அறிவித்தல் Read More »

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

7 நாட்களுக்குள் அகற்றத் தவறின் நீதிமன்ற நடவடிக்கை மற்றும் திணைக்களத்தால் இடித்து அகற்றப்படும் என எச்சரிக்கை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களம்  உத்தரவு பாறுக் ஷிஹான் இலங்கையின் கடலோர வலய எல்லைக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளரால் இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள்

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல் Read More »

கனமழையால் வீடுகளுக்குள் நீர்

வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் இன்று(20) மாலை பெய்த கனமழை காரணமாக தம்பலாகாமம் கோயிலடி பகுதியில் உள்ள சில வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளது. இதனால் ஓரிரு குடும்பங்கள் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. திடீரெனப் பெய்த கனமழையினால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பருவப்பெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்

கனமழையால் வீடுகளுக்குள் நீர் Read More »

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: அடுத்த 24 மணித்தியாலத்தில் தாழமுக்கம் உருவாகும் எனக் எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் நிலவி வரும் தளம்பல் நிலை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் புதிய தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக, இன்று (21) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மழை தீவிரமடையக்கூடும். மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும்,

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: அடுத்த 24 மணித்தியாலத்தில் தாழமுக்கம் உருவாகும் எனக் எச்சரிக்கை! Read More »

அம்பாறை மாவட்டத்தில்  சமையல் எரிவாயுக்கள்  தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

பாறுக் ஷிஹான்- நாடளாவிய ரீதியில் மீண்டும்   சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை  அவதானிக்க முடிகின்றது.  கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண முடிகின்றது. மேலும் எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல்

அம்பாறை மாவட்டத்தில்  சமையல் எரிவாயுக்கள்  தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம் Read More »

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில், அஸ்-ஸையித் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது. இப் புனிதமிக்க கொடியேற்ற பெருவிழாவானது 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து 12 நாட்கள் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் நடைபெற்று 2026

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா Read More »