• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்கக் கேள்வி கோரல் அறிவித்தல்

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்கக் கேள்வி கோரல் அறிவித்தல்


பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை 01.01.2027 தொடக்கம் 31.12.2027 வரையான ஒரு வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு விடுவதற்காகத் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கேள்விகள்  கோரப்பட்டுள்ளன.

குத்தகைக்கு விடப்படும் முக்கிய நிலையங்கள்:மாட்டிறைச்சிக் கடைகள்:
12ஆம் கிராமம் மாட்டிறைச்சிக் கடைசொறிக்கல்முனை மாட்டிறைச்சிக் கடை (தௌஹீத் பள்ளி)சவளக்கடை மாட்டிறைச்சிக் கடை (பிலால் ஜும்ஆ பள்ளி)
மத்திய முகாம் மாட்டிறைச்சிக் கடை (சந்தைப் பகுதி)

பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் ஏனைய கடைகள்:
மத்திய முகாம் நடமாடும் சந்தை & பொதுச் சந்தை,அன்னமலை பொதுச் சந்தை & நடமாடும் சந்தை,நடமாடும் சந்தை (முஸ்லிம் பிரிவு),சொறிக்கல்முனை வாராந்தச் சந்தை & நடமாடும் சந்தை,ஆட்டிறைச்சிக் கடை (அன்னமலை பொதுச் சந்தை),கோழி இறைச்சிக் கடை (அன்னமலை பொதுச் சந்தை)

விண்ணப்பப் படிவ விநியோகம்: 15.10.2026 தொடக்கம் 30.10.2026 வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்).

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நேரம்: 30.10.2026 பிற்பகல் 02.30 மணிக்கு முன்னர் (பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைமை அலுவலகக் கேள்விப் பெட்டியிலோ இடலாம்).

கேள்விப் பத்திரங்கள் திறக்கப்படும் நேரம்: 30.10.2026 பிற்பகல் 03.00 மணிக்கு.

விண்ணப்பதாரிகளுக்கான முக்கிய நிபந்தனைகள்:

பிரதேச சபையினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவத்திலேயே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

படிவத்தைப் பெற்றுக்கொள்ளும் போது தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு மற்றும் கிராம உத்தியோகத்தரின் வதிவிடச் சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பிரதேச சபைக்கு முந்தைய ஒப்பந்தங்களின் கீழ் நிலுவைப் பணங்களை வைத்துள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பக் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.

கேள்வி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், தெரிவு செய்யப்படும் கேள்விப்பணத்தை உரிய காலப்பகுதிக்குள் செலுத்துவதற்குத் தயார்நிலையில் இருத்தல் வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விரிவான நிபந்தனைகளை நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலக அறிவித்தல் பலகையில் பார்வையிட முடியும் எனத் தவிசாளர் / செயலாளர் அறிவித்துள்ளார்.–

Share the Post: