admin

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் விழா!

“இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில், வடக்கு–கிழக்கு முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு மாநாடும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. “சமகால அரசியலும் போராளிகளின் வகிப்பாகமும்” என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு இடம்பெற்றதுடன், தமிழ்த் தேசியத்திற்குப் பங்காற்றியவர்களைக் கௌரவிக்கும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்ததாக நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் விழா! Read More »

 கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்

சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அசம்பாவிதம் பாறுக் ஷிஹான்கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக வட்டா (Vatta) வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த ‘அபிவிருத்தி

 கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம் Read More »

சாய்ந்தமருதுவில் கடும் வெள்ளம்! பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

பாதுகாப்பு எச்சரிக்கை: வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், மின்சாரக் கசிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சாய்ந்தமருதுவில் கடும் வெள்ளம்! பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின Read More »

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க சமூக ஊடகங்கள் பயன்பட வேண்டும்: திருகோணமலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு!

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் சமூக ஊடகங்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வுச் செயலமர்வொன்று அண்மையில் திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் “எனது இணையம் – எனது உரிமை” எனும் தொனிப்பொருளில் இந்த ஒருநாள் விழிப்புணர்வுச் செயலமர்வு நடத்தப்பட்டது. இச்செயலமர்வில் பிரதேச ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது மனித உரிமைகள்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க சமூக ஊடகங்கள் பயன்பட வேண்டும்: திருகோணமலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு! Read More »

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது!

பாறுக் ஷிஹான் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது! Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

பாறுக் ஷிஹான் நிறுத்தல் தராசு, மோட்டார் சைக்கிள்,கைத்தொலைபேசி ,பிளாஸ்டிக் குழாய் , என்பன பொலிஸாரால் மீட்பு; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த 32 வயதுடைய நபர் ஒருவர் (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீனுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைதான சந்தேகநபரிடமிருந்து 10

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

பாறுக் ஷிஹான் நிறுத்தல் தராசு, மோட்டார் சைக்கிள்,கைத்தொலைபேசி ,பிளாஸ்டிக் குழாய் , என்பன பொலிஸாரால் மீட்பு; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ‘ஐஸ்’  போதைப்பொருளை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த 32 வயதுடைய நபர் ஒருவர் இன்று (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீனுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைதான சந்தேகநபரிடமிருந்து

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது Read More »

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளை ஏற்பாடு; பொலிஸ் பொறுப்பதிகாரி, காழி நீதிபதி உட்பட பலர் பங்கேற்பு! பாறுக் ஷிஹான் இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற ஆண்-பெண் தொடர்புகள் சம்பந்தமான சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டமொன்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (01) மாலை கிளையின் காரியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. கிளையின் கௌரவ தலைவர் அஷ்ஷேய்க் M.M. மீரா ஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம்,

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு Read More »

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்!

இளைஞர்களின் துணிச்சலான முயற்சியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது; இரவு நேரங்களில் அவதானமாக இருக்குமாறு கிராமவாசிகளுக்கு வேண்டுகோள்! பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் பகுதியில் பெரும் பரப்பரப்பும் அச்சமும் நிலவியது. கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார் ஒன்றுதிரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர். எனினும்,

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்! Read More »

இகினியகல பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி கைது

பாறுக் ஷிஹான் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி  அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal Audit) போதே இந்த நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம்

இகினியகல பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி கைது Read More »