admin

கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த ஐசிஎஸ்டி (ICST) மற்றும் பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஐசிஎஸ்டி (ICST) பல்கலைக்கழகத்திற்கும் பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் (IIUC) இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தத்தில் ஐசிஎஸ்டி பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணைவேந்தர் பேராசிரியர் சிறியாணி விக்ரமசிங்க அவர்களும், பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் பொருளாளர் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் மஹ்பூபுர் ரஹ்மான் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் எம்.டி. மஹ்பூஸுர் ரஹ்மான்

கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த ஐசிஎஸ்டி (ICST) மற்றும் பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து! Read More »

நுவரெலியாவில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: பல இடங்களில் திடீர் நிலச்சரிவு; பெருந்தோட்ட மக்கள் கடும் அசௌகரியம்!

நுவரெலியா: நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் கடும் மழை பெய்து வரும் நிலையில், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் நிலச்சரிவுகளும் மண்மேடு சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் இடைவிடாத அடைமழை காரணமாக, பிரதான வீதிகளுக்கு மேலாக மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், பாறைகளும் உருண்டு விழுந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள தோடு, பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவு

நுவரெலியாவில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: பல இடங்களில் திடீர் நிலச்சரிவு; பெருந்தோட்ட மக்கள் கடும் அசௌகரியம்! Read More »

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது

 பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக  களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிகுடி பொலிஸார், திங்கட்கிழமை (03) திருடப்பட்ட தங்க

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது Read More »

கினிகத்ஹேனையில் பயங்கர மண்சரிவு: வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் உறுதி!

நுவரெலியா மாவட்டம், கினிகத்ஹேனை பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில்ப்பட்டு நால்வர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கினிகத்ஹேனைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புக் வீடொன்றின் மீது திடீரெனப் பெரும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது வீட்டிலிருந்த நால்வரே இவ்வாறு மண்மேட்டுக்குள் புதையுண்டு காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சென்றடைந்துள்ள பொலிஸார், இராணுவத்தினர்

கினிகத்ஹேனையில் பயங்கர மண்சரிவு: வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் உறுதி! Read More »

தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முழு ஒத்துழைப்பு – சஜித் பிரேமதாச

மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,

தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முழு ஒத்துழைப்பு – சஜித் பிரேமதாச Read More »

கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் வீதி விபத்தில் காயம்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நேற்று (03) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாழங்குடா பகுதியில் அவர் பயணித்த வாகனம் எதிர்பாராதவிதமாக மாடொன்றுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த டாக்டர் ஜி. சுகுணன்

கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் வீதி விபத்தில் காயம்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி! Read More »

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு–

(கனகராஜா சரவணன்) கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கிழக்கின் அரசியலை கிழக்கு மக்களே தீர்மானிக்கும். எனவே  கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில் மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான  ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு கிரானை தலைமையமாக கொண்டு இயங்கிவரும் ஈழத் மிழர் முன்னணி கட்சி நேற்று திங்கட்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு– Read More »

தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இந்த அரசு மிக நுட்பமான முறையில் பறித்தெடுத்து வருகின்றது– நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்-

(கனகராஜா சரவணன்) வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற  வகையில் திட்டமிட்ட முறையில்  தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது

தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இந்த அரசு மிக நுட்பமான முறையில் பறித்தெடுத்து வருகின்றது– நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்- Read More »

ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே  6 கட்சிகள் கூட்டு — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்–

( (கனகராஜா சரவணன்) நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜிய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்ற அதற்கான பலத்தை காட்ட இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டு இது ஒரு நிகழ்ச்சி நிரல்.எனவே இந்த சதி நாடகத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து நின்று தடுத்து நிறுத்தாவிட்டால் நாங்கள் இழந்த இந்த தியாகம் வீணாகிபோய்விடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும்

ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே  6 கட்சிகள் கூட்டு — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்– Read More »

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்:

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்!உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே இடத்தில் தகவல் சேவை; அமைச்சு முழுமையான நிதி ஒதுக்கீடு! பாறுக் ஷிஹான் உலகப் புகழ்பெற்ற ஆறுகம்பே சுற்றுலாப் பிராந்தியத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் “சன்செட் வியூ பார்க்” (Sunset View Park) தகவல் மற்றும் சேவை மையத்திற்கான அடிக்கல்

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்: Read More »