admin

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு

பாறுக் ஷிஹான் அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசாவில் இடம்பெற்றது. வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கல் — நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு—

((கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.  அதேவேளை அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுமாறு வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க  அதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், வீடமைப்பு,

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கல் — நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு— Read More »

திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல்

A.H.HASFAR HASFAR நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 வருட காலப்பகுதியில் குறித்த நகரங்களின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அடையாளம் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம்

திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல் Read More »

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

பாறுக் ஷிஹான் பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம்

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு! Read More »

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை  (01) சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி   எம். மதனின்  நேரடி வழிகாட்டலிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில்இ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள், மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரிகள்இ மருந்தக உரிமையாளர்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More »

திருகோணமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு, சுற்றுலா துறையின் மேம்பாட்டுக்கான ஒரு அடித்தளமாகும் 

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா, முதலீடு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் (01.09.2026) திருகோணமலைக்கு வருகை தந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்து சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வருகை தந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரியமான பரதநாட்டிய நிகழ்வுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில்

திருகோணமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு, சுற்றுலா துறையின் மேம்பாட்டுக்கான ஒரு அடித்தளமாகும்  Read More »

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, சுமார் 60 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 6 வயது சிறுமி மனிஷா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரசுவா பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியின் அழுகுரலைக் கேட்ட மீட்புக்குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டெடுத்தனர். 3 நாட்களாக உயிருக்குப் போராடி மரணத்தை வென்ற அச்சிறுமி, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி! Read More »

கிண்ணியா சின்ன மகமார் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவுசர் குடிநீர் விநியோகம்

ஹஸ்பர் ஏ ஹலீம் – எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம் இடம் பெற்றன. நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள்

கிண்ணியா சின்ன மகமார் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவுசர் குடிநீர் விநியோகம் Read More »

இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட 2026ஆம் ஆண்டின் தேசிய கனிமக் கொள்கைக்கு அமைவாக, நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேலும் பலப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது குறித்தும், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

பாணந்துறை – கொம்பனித்தெரு ரயில் பாதை நவீனமயமாக்கல்: ரத்மலானையில் புதிய தண்டவாளம் அமைக்கும் மையம் திறப்பு!

இலங்கையின் கடலோர ரயில் பாதையை அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கில், பாணந்துறை முதல் கொம்பனித்தெரு வரையிலான இரட்டை ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் முக்கிய கட்டமாக, ரத்மலானை பகுதியில் புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் மையம் (Track laying site) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள்: இப்பணிகளை நேற்று (31) நேரில் சென்று பார்வையிட்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்னா குணசேன, சீரமைப்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு

பாணந்துறை – கொம்பனித்தெரு ரயில் பாதை நவீனமயமாக்கல்: ரத்மலானையில் புதிய தண்டவாளம் அமைக்கும் மையம் திறப்பு! Read More »