admin

அனோஜன் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு

பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், இலங்கை

அனோஜன் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு Read More »

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கும் விசேட சமூக நலன்புரி நிகழ்வு வெள்ளிக்கிழமை (09)   நடைபெற்றது. நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் டாக்டர் திருமதி மயூரன் யாமினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 25 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 25 முட்டைகள் வீதம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் நாவிதன்வெளி சுகாதார

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு Read More »

மருதமுனை கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

sihanfarook மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் கிருபாகரன்   என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.40 மணியளவில் பாண்டிருப்பு – 02 விஷ்ணு கோவிலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மருதமுனை கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு Read More »

அரச நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை நிறுவுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை நிறுவுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (08) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம் ஹேமந்த குமார மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும்  மாவட்ட செயலக உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவருமாகிய எஸ்.சுதாகரன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடைபெற்றது. திருகோணமலை

அரச நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை நிறுவுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  Read More »

பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா..!

ஹஸ்பர் ஏ எச்) மூதூர் , பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தில் இம் முறை 2026 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (08) வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் பு.  ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் வித்தியாலய அதிபர் தலைமையுரை நிகழ்த்துவதையும்,  அதிதிகள்,  மாணவர்கள் அழைத்து வரப்படுவதையும் பரிசளிப்பு விழா இடம் பெறுவதையும் காணலாம். 

பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா..! Read More »

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றக் கைகொடுக்குமாறு பெரியணிலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவாஸ்தானத்தின் பிரதம குரு சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான மனிதாபிமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் ஆற்றியுள்ள விசேட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது பிராந்தியத்தைச் சேர்ந்த அனோஜன் எனும் இளைஞன், வறுமை மற்றும் குடும்பச் சுமை

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள் Read More »

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம்–

(கனகராஜா சரவணன்)  மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (09); கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை 10.00 மணிக்கு காந்தி பூங்காவில் ஒன்றிணைந்தனர்.

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம்– Read More »

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டக்களப்பின் பல்துறை வீரன் துஷ்யந்தன் வரலாற்றுச் சாதனை!

மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தேசிய மட்ட கராத்தே போட்டியில் பல்துறை விளையாட்டு வீரன் துஷ்யந்தன் வரலாற்றுச் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் ‘சாதிக்க வேண்டும்’ என்ற உறுதியான தன்னம்பிக்கை ஆகியவையே ஒருவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதற்கு துஷ்யந்தனின் இந்த மகத்தான வெற்றி மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது. மட்டக்களப்பு மண்ணின் திறமையையும் விளையாட்டு ஆற்றலையும் தேசிய அரங்கில் உயர்த்திப் பிடித்துள்ள இவரது இந்த சாதனை, எதிர்காலத்தில் பெறவுள்ள மேலும்

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டக்களப்பின் பல்துறை வீரன் துஷ்யந்தன் வரலாற்றுச் சாதனை! Read More »

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ மேலதிக பரிசோதனைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக கண் மருத்துவப் பரிசோதனைகளுக்காக இன்று (09) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கண் உபாதை காரணமாக நேற்று (08) அவர் சிறைச்சாலை நிபுணர் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார். இதன்போது குறித்த மருத்துவரினால் வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, மேலதிக பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணரிடம் அவரை ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ மேலதிக பரிசோதனைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்! Read More »

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘Online Examination Database Management System’ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப் புதிய டிஜிட்டல் முறைமை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடக் கூட்ட மண்டபத்தில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற விசேட நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி Read More »