admin

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில், அஸ்-ஸையித் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது. இப் புனிதமிக்க கொடியேற்ற பெருவிழாவானது 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து 12 நாட்கள் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் நடைபெற்று 2026

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா Read More »

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்த விசேட ஆயத்தக் கலந்துரையாடல்!

  பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (19) இரவு   சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் அவர்களின் தலைமையில் இக் கலந்தரையாடல் மிகச் சிறப்பாக

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்த விசேட ஆயத்தக் கலந்துரையாடல்! Read More »

அகுரணையில் பாரிய வீதி விபத்து: 6 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த பாரிய விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்ததுடன், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகுரணையில் பாரிய வீதி விபத்து: 6 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி! Read More »

அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு ஊர்வலம்

 வாணி விழா ஊர்வலங்கள் பாடாசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றது.இதற்கமைவாக அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு இன்று (19) அழகிய ஊர்வலம் இடம்பெற்றது.ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அமர்ந்த சரஸ்வதி தேவியின் திருவுருவை மாணவர்கள் சுமந்து சென்றதுடன் ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டமை சிறப்பாக அமைந்தது.பாடசாலையின் அதிபர் சர்மிளா சசிதரன் தலைமையில் இடம்பெற்ற வாணி விழா ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் பூஜைகளை குருமார்கள்; நடாத்தி வைத்தார்.ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சரஸ்வதி தேவியின்

அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு ஊர்வலம் Read More »

ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர்   கைது

 பாறுக் ஷிஹான்அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம   நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில்  மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், அப்பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (18) மாலை  அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த

ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர்   கைது Read More »

நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி-

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் உட்புற வீதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகத் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடிச் சீரமைக்கப்படாமல் விடப்படுவதனால், வீதிகள் முழுமையாக நாசமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குடிநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் அல்லது தனியார் தேவைப்பாடுகளுக்காக வீதிகளை வெட்டி நீர் இணைப்புகள் பெறப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட இடங்கள் முறையாகக் காப்பரண் செய்யப்பட்டுத் தார் அல்லது கொங்கிரீட் இடப்பட்டுச் சீரமைக்கப்படுவதில்லை எனப் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி- Read More »

ஞானசாரதேரர் விடையத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது -ஸ்ரீநேசன் எம்.பி

ஞானசாரதேரர் விடையத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தவர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார் இன்று ஞாயிற்றுக்கிழமை(18.10.2026) மாலை மட்டக்களப்பு

ஞானசாரதேரர் விடையத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது -ஸ்ரீநேசன் எம்.பி Read More »

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

(கனகராஜா சரவணன் ) மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றதுடன் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மீண்டும் மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கணக்குபிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரவீந்திரன் நிரோஜினி என்பவரே

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்– Read More »

சர்வதே வெள்ளைப் பிரம்பு  தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச லயன்ஸ்  கழகம், மட்டக்களப்பு பாடும்மீன் லயன்ஸ் கழகம் ஆகியன மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்துடன் இணைந்து  நடாத்திய வெள்ளைப்பிரம்பு தினம்  விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை(17.10.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின்  மாவட்ட ஆளுநர் லயன் சகீர் அஹமட் பிரதம விருந்தினராகவும், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன் கே.லோகேந்திரன், சர்வதேச லயன்ஸ் கழகத்தின்  முதன்மை திட்ட இணைப்பாளர் பேரின்பராஜா சடாட்சரராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். மட்டக்களப்பு உதயம்

சர்வதே வெள்ளைப் பிரம்பு  தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணி. Read More »

சிவாநந்தியன் சிறகுகள் அமைபின் ஆசிரியர் கௌரவிப்பு.

மட்டக்களப்பு சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பு நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும், வருடாந்த நண்பர்கள் சங்க ஒன்றுகூடலும் சனிக்கிழமை (17.10.2026) மட்டக்களப்பு தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்றது. மட்டக்களப்பு சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பின் தலைவர் இ.முகில்வளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் அதிபர் ஈ.பி.ஆனந்தராஜா, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் கல்விசாரா ஊழியர்கள்,மற்றும் சிவானந்தா வித்தியாலய அதிபர் எம்.தயாபரன், பழைய மாணவர் சங்க கல்வி இணைப்பு செயலாளர் இ.சாஜிராஜன், சிவானந்தியன் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து

சிவாநந்தியன் சிறகுகள் அமைபின் ஆசிரியர் கௌரவிப்பு. Read More »