• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அகுரணையில் பாரிய வீதி விபத்து: 6 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

அகுரணையில் பாரிய வீதி விபத்து: 6 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த பாரிய விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்ததுடன், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: