அகுரணையில் பாரிய வீதி விபத்து: 6 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த பாரிய விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்ததுடன், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகுரணையில் பாரிய வீதி விபத்து: 6 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி! Read More »







