• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு ஊர்வலம்

அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு ஊர்வலம்

 வாணி விழா ஊர்வலங்கள் பாடாசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு இன்று (19) அழகிய ஊர்வலம் இடம்பெற்றது.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அமர்ந்த சரஸ்வதி தேவியின் திருவுருவை மாணவர்கள் சுமந்து சென்றதுடன் ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டமை சிறப்பாக அமைந்தது.
பாடசாலையின் அதிபர் சர்மிளா சசிதரன் தலைமையில் இடம்பெற்ற வாணி விழா ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் பூஜைகளை குருமார்கள்; நடாத்தி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சரஸ்வதி தேவியின் பிரார்த்தனை பாடல்களை பாடி சென்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பொதுமக்களால் தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
விஜயதசமி தினமான நாளை ஏடு தொடங்கும் நிகழ்வும் பாடசாலைகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: