admin

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய  மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.  இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள்  நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து  மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த  அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த காணியில் மண்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை Read More »

திருகோணமலையில் தோழர் பத்மநாபா வின் 36 வது ஆண்டு தியாகிகள் தினம்.

தோழர் பத்மநாபாவின் 36 வது ஆண்டு தியாகிகள் தினம் தமிழர் சமூக ஜன நாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பணிமனையில் வெள்ளிக்கிழமை (19.06.2026) காலை 10.00 மணிக்கு இடம் பெறவுள்ளது என திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார். இந்த தியாகிகள் தின நிகழ்வில் வடக்கு கிழக்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள்,  பொது மக்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் தோழர் பத்மநாபா வின் 36 வது ஆண்டு தியாகிகள் தினம். Read More »

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்களுக்கு தீர்வு

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்ததை அடுத்து குறித்த பிரச்சினை ஊடகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.இதனை அடுத்து குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் உரிய பகுதிக்கு கள் விஜயம் செய்து குடி நீரை வழங்கி பிரச்சினையை தீர்த்து வைத்தார்.. முன்னர் செய்தி-சுமார் 2004 ம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்களுக்கு தீர்வு Read More »

 இந்திய இராணுவம் அமெரிக்க டாலர் 5.5 மில்லியன் மதிப்பிலான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது

இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு கையிருப்பிலிருந்து அமெரிக்க டாலர் 5.5 மில்லியன் மதிப்பிலான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இப்பொருட்களின் பற்றாக்குறையால் இலங்கை இராணுவத்தின் செயல்பாட்டு தயார்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த அவசரத் தேவையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற இந்திய அரசு ஒப்புக்கொண்டதுடன், இப்பொருட்களை இலவசமாக கொழும்பிற்கு கொண்டு செல்ல சிறப்பாக நியமிக்கப்பட்ட இந்திய கடற்படை கப்பலான INS

 இந்திய இராணுவம் அமெரிக்க டாலர் 5.5 மில்லியன் மதிப்பிலான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது Read More »

கொழும்பில் நடைபெற்ற “ரூபாவிலிருந்து ரூபாவுக்கு: இந்திய இலங்கை வர்த்தக தொடர்புகளை வலுவாக்கல்” என்ற தலைப்பிலான வட்ட மேசை மாநாடு

ஹஸ்பர் ஏ.எச்- “ரூபாவிலிருந்து ரூபாவுக்கு: இந்திய இலங்கை வர்த்தக தொடர்புகளை வலுவாக்கல்” என்ற தலைப்பிலான வட்டமேசை மாநாடு ஒன்றை 2026 ஜூன் 15 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒழுங்குசெய்திருந்தது. இந்த நிகழ்வில் அரச நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், இரு நாடுகளதும் வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் கலந்துகொண்டு , உள்ளூர் நாணயங்களின் மேம்பட்ட பயன்பாட்டின் ஊடாக இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார

கொழும்பில் நடைபெற்ற “ரூபாவிலிருந்து ரூபாவுக்கு: இந்திய இலங்கை வர்த்தக தொடர்புகளை வலுவாக்கல்” என்ற தலைப்பிலான வட்ட மேசை மாநாடு Read More »

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சண்டையை தடுத்த முதியவரின் வீட்டை ஒரு குழு உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓட்டம்–

((கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்று வரும் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை  தடுத்த வயோதிபரின் பூட்டியிருந்த  வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்ற இருவர் வீட்டை உடைத்து யன்னல், அலமாரி கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து நெருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று திங்கட்கிழமை(15) பகலில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சண்டையை தடுத்த முதியவரின் வீட்டை ஒரு குழு உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓட்டம்– Read More »

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச் 2026 ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுச்சூழல் தினத்திற்கு (ஜூன் 05) அதிகாரப்பூர்வமாக “அவசர காலநிலை நடவடிக்கை” (Urgent Climate Action) என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின வார நிகழ்வுகள் பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நேற்று (16) நடைபெற்றன.  மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது நிலையில்  பல நிகழ்வுகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார தலைமையில்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு Read More »

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

மூதூரில் கிழக்கு மாகாண ஆளுநரால் அடிக்கல் நாட்டப்பட்டது! தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மூதூர், ஷாபி நகரைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு 6 மில்லியன் ரூபா செலவில் புதிய வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (16) நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தனசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். திட்டத்தின் முக்கிய விபரங்கள்: மூதூர், சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 15 வீடுகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்! Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகதிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட வெற்றிடங்களுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிதாக நியமிக்கப்பட்ட உதவிப் பதிவாளர்கள், உதவி நிதியாளர் மற்றும் உதவி உள்ளக கணக்காய்வாளர் ஆகிய பதவிக்களுக்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை 2026.06.15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன் தமது நியமனக் கடிதங்களுக்கமைய பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்கள் மற்றும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகதிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்! Read More »

பிளாட்டினம் விருது வென்ற களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் சிதம்பரநாதன்.

2026 ஆம் ஆண்டு சிங்கர் நிறுவனத்தினால் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய விற்பனை மேற்கொண்டமைக்காக தெரிவு செய்யப்பட்ட பத்து வியாபார உரிமையாளர்களுக்கான பிளாட்டினம் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள எஸ்.என்.எலற்றிக்கல் இம்முறை தெளிவாகியுள்ளது. அதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து வியாபார நிலைய உரிமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு சிங்கர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்; இடம்பெற்றது. இதன்போது களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் க.சிதம்பரநாதனுக்கு

பிளாட்டினம் விருது வென்ற களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் சிதம்பரநாதன். Read More »