admin

வீதி அபிவிருத்தி பணி அங்குரார்ப்பண வைபவம்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல் மெட்டியாவ  வடக்கு பகுதியில் அமைந்துள்ள 2 கிலோமீட்டர் நீளமான வீதியை 5.3 மில்லியன்  செலவில் காபட் அமைத்து அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் நேற்று (01.07.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. விகாராதிபதியின் ஆசிர்வாதத்தில் நடைபெற்ற நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,தம்பலகாமம் பிரதேச செயலாளர்

வீதி அபிவிருத்தி பணி அங்குரார்ப்பண வைபவம் Read More »

சுப்பிரமணிக்கு காட்டிற்குள் செல்ல தடை: வாகனத்தில் காட்டுப்பாதை முடிவு வரை செல்லும்

சிறுத்தையால் சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்;காட்டுக்குள் சுப்பிரமணி செல்வதற்கு வாய்ப்பில்லை!வனஜீவராசிகள் திணைக்களம் அறிவிப்புசமகாலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால் அது சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.எனவேகாட்டுக்குள் சுப்பிரமணியை கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை.இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவித்தார்.சுப்பிரமணிக்கு காட்டுக்குள் செல்ல அனுமதி மறுப்பு என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து நாம் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கதிர்காம பாதயாத்திரை

சுப்பிரமணிக்கு காட்டிற்குள் செல்ல தடை: வாகனத்தில் காட்டுப்பாதை முடிவு வரை செல்லும் Read More »

வவுனியா தோனிக்கல் நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா பக்திப்பூர்வமாக நடைபெற்றது!

வவுனியா: வவுனியா, தோனிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவம் (தேர்த்திருவிழா) கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.06.2026) அன்று மிக விமரிசையாகவும் பக்திப்பூர்வமாகவும் நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ நாகபூசணி அம்மன் உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் வவுனியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பக்தர்கள்

வவுனியா தோனிக்கல் நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா பக்திப்பூர்வமாக நடைபெற்றது! Read More »

 விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு: விசாரணை முன்னெடுப்பு

 பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம்,   கஞ்சிக்குடிச்சாறு      காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் (STF)  கடந்த திங்கட்கிழமை(29) மாலை  மீட்கப்பட்டிருந்தது. திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக,   கஞ்சிக்குடிச்சாறு   பக்மிட்டிய காட்டுப் பகுதியில்  விசேட ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, காட்டுப் பகுதியில் இருந்த பெரிய மரப்பொந்து ஒன்றினுள் மிகவும்

 விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு: விசாரணை முன்னெடுப்பு Read More »

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘டெங்கு ஒழிப்பு’ மாறுவேடத்தில் கைது

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘டெங்கு ஒழிப்பு’ மாறுவேடத்தில் கைதுஉகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், சிசிடிவி (CCTV) பாதுகாப்பு மற்றும் பொலிஸ் உளவாளிகளின் தடைகளையும் தாண்டி, அம்பாறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உகண -21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்தச் சதுரங்க வேட்டை அரங்கேறியுள்ளது. பொலிஸாரை ஏமாற்றிய

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘டெங்கு ஒழிப்பு’ மாறுவேடத்தில் கைது Read More »

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பாடசாலை சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்  செவ்வாய்க்கிழமை(30)  நிந்தவூர் அல் மதீனா (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜாபிர் வழிகாட்டலில் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு, தொடர்புடைய சட்டங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளைப்

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More »

திருகோணமலையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை அமரர் இராஜராஜேஸ்வரி அவர்களின் நூறாவது ஜனத்தை முன்னிட்டும், 34 வது நினைவு தினத்தை முன்னிட்டும் வறியவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (01) திருகோணமலையில் இடம் பெற்றது.  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த  தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு! Read More »

காணி ஆவணங்களை விரைவுபடுத்த அரச அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு முன்னெடுப்பு

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நீண்டகாலமாக காணி ஆவணங்கள் அற்ற நிலையில் உள்ள மக்களுக்கு, விரைவாகவும் துரிதமாகவும் காணி ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு, அரச அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு ஒன்று இன்று (01.07.2026) தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர்  க. சதிசேகரன் தலமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில், அரச அதிகாரிகள் காணி மீளப்பெற்றுக் கொடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்து தெளிவூட்டப்பட்டதுடன் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார

காணி ஆவணங்களை விரைவுபடுத்த அரச அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு முன்னெடுப்பு Read More »

 சுகாதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும், பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (30) இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இக்கலந்துரையாடலில் ஜம்இய்யதுல் உலமா

 சுகாதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு Read More »

லஹுகல தேசியப் பூங்காவில் நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர்  லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த ஏரிப் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட யானை ஒன்றுக்கு நேற்று (30) முதல் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த யானை சுமார் 7 அடி உயரமும், 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை இருக்கும் இடத்திலேயே

லஹுகல தேசியப் பூங்காவில் நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை Read More »