திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல் மெட்டியாவ வடக்கு பகுதியில் அமைந்துள்ள 2 கிலோமீட்டர் நீளமான வீதியை 5.3 மில்லியன் செலவில் காபட் அமைத்து அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் நேற்று (01.07.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

விகாராதிபதியின் ஆசிர்வாதத்தில் நடைபெற்ற நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரஜா சக்தி தலைவர்கள்,பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், அன்றாடப் பயணங்களை மேலும் இலகுபடுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், இவ்வபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்த அரசாங்கத்திற்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.






