admin

உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தை மையமாகக் கொண்டு காரைதீவு பிரதேச சபையின் சிரமதானப் பணி

உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆலய வளாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் தவிசாளரும் தற்போதைய கௌரவ உறுப்பினருமான வை. கோபிகாந்த், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இணைந்து சிரமதானப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். சிரமதானத்தின் போது

உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தை மையமாகக் கொண்டு காரைதீவு பிரதேச சபையின் சிரமதானப் பணி Read More »

தேசிய மக்கள் சக்தியின் வீடமைப்புத் திட்டம்: இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 50 இலட்சம் செலவில் புதிய இல்லம்!

இயற்கை அனர்த்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ஏற்பாட்டில் புதிய வீடு ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தேதாப்பிள கிராமத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் சமூக நலன்புரித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூபாய் 50 இலட்சம் மதிப்பிடப்பட்ட செலவில் இந்த நவீன வீடு அமையவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வீடமைப்புத் திட்டம்: இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 50 இலட்சம் செலவில் புதிய இல்லம்! Read More »

நண்பர்கள், உறவினர்களின் கண்ணீர் அஞ்சலியுடன்… உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வெலிகடையில் இறுதி மரியாதை!

கடமையின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வெலிகடையில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

நண்பர்கள், உறவினர்களின் கண்ணீர் அஞ்சலியுடன்… உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வெலிகடையில் இறுதி மரியாதை! Read More »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மீள் திருத்தக் கட்டணங்கள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 08) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு: மேலதிக விபரங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு! Read More »

நெல் கொள்வனவு: அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் சம்மதம்!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவாத விலைகளின் கீழ், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நாட்டின் அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கை அளவில் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும், மில் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, பின்வரும் விலைகளின் அடிப்படையில் நெல்லைக் கொள்வனவு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சாத்தியக்கூறுகள்

நெல் கொள்வனவு: அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் சம்மதம்! Read More »

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: பாதிப்பு 63,000 கடந்தது – 42 பேர் பலி!

இலங்கையில் டெங்கு தொற்றின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 63,839 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்று (07) வரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த கொடிய தொற்றினால் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதே இந்த சடுதியான பரவலுக்கு பிரதான

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: பாதிப்பு 63,000 கடந்தது – 42 பேர் பலி! Read More »

யாழ் போதனாவில் இடம்பெற்ற குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம்..!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(06.07.2026) சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார் 5,000 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச்சுகப்பிரசவங்கள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் (PHM) முக்கியமான மற்றும் மறுக்க முடியாத பங்காற்றுகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் தொழில்முறை சேவையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி

யாழ் போதனாவில் இடம்பெற்ற குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம்..! Read More »

திருகோணமலை சுற்றுலா தகவல் மையத்தின் எதிர்காலம் குறித்தும் வர்த்தக சபை கவலை கொண்டுள்ளது _திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தலைவர் கே. குலதீப்பன்

திருகோணமலை சுற்றுலா தகவல் மையத்தின் எதிர்காலம் குறித்தும் வர்த்தக சபை கவலை கொண்டுள்ளது என திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தலைவர்கே. குலதீப்பன் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று(08) வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  இந்த மையம், பார்வையாளர்களுக்கு சேவை செய்வதற்கும் மாவட்டத்தை மேம்படுத்துவதற்கும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் முதலில் நிறுவப்பட்டது. தற்போது, ​​இந்த மையம் நகராட்சி மன்றத்தின் பொறுப்பில் உள்ளது. ஒரு சுற்றுலா தகவல் மையத்தை, ஒப்பந்தப்புள்ளி செயல்முறை மூலம்

திருகோணமலை சுற்றுலா தகவல் மையத்தின் எதிர்காலம் குறித்தும் வர்த்தக சபை கவலை கொண்டுள்ளது _திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தலைவர் கே. குலதீப்பன் Read More »

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்–

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர்  இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைத்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் 5 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம்

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்– Read More »

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (7) பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சுங்காங்கேணி  சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று திங்கட்கிழமை குளத்தில் வலையை வீசி விட்டு வீடு திரும்பியவர் சம்பவ தினமான இன்று செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு Read More »