admin

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்

பாறுக் ஷிஹான் புதிய கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரியாக மகேஷ் சேனரத்ன நியமனம்  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டத்தரணி) வருண ஜயசுந்தர  பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம் Read More »

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும்  தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்

தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் தமிழரசு கட்சியின் கொள்கையான முஸ்லிம்களுக்கு சுயாட்சி திட்டத்துக்காக  இந்த 6 கட்சிகள் கொண்ட திருட்டுக் கூட்டணி அமைக்கப்பட்டள்ளது எனவே இந்த சுயாட்சி திட்டத்தை செயல்படுத்த சம்பந்தன் தலைவர் பிரபாகரனை முடித்துவிடச் சொன்னாரா?  என்ற சந்தேகம் எழுந்துள்ளது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று வியாழக்கிழமை (16) ஊடக அறிக்கை

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும்  தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் Read More »

வரட்சி பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி அரசாங்கம் நிறுத்தியுள்ளது – செங்கலடி பிரதேசசபை அமர்வில் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தியுள்ளமைக்கு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதிகள் அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வருடத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் வரட்சியின் போது மக்களுக்கான குடிநீரை உள்ளுராட்சி மன்றங்கள் பவுசர்கள் மூலமாக வழங்கிவந்தன. அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த செலவினங்களுக்கான நிதியொதுக்கீடுகளை நிறுத்தியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள பல

வரட்சி பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி அரசாங்கம் நிறுத்தியுள்ளது – செங்கலடி பிரதேசசபை அமர்வில் கண்டனம் Read More »

30 ஆண்டுகாலப் பெருந்திட்டம்! 3 ஆண்டுகளில் புதிய பொலிவு பெறும் கட்டுநாயக்க விமான நிலையம்: ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் முக்கிய தீர்மானம்!

அடுத்த 30 ஆண்டுகால எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக நவீனமயமாக்குவதற்கான விசேட அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இம்மாபெரும் அபிவிருத்தித் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் வருமாறு: 1. கட்டுநாயக்க விமான நிலைய

30 ஆண்டுகாலப் பெருந்திட்டம்! 3 ஆண்டுகளில் புதிய பொலிவு பெறும் கட்டுநாயக்க விமான நிலையம்: ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் முக்கிய தீர்மானம்! Read More »

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை —ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

(கனகராஜா சரவணன்) கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை கூழங்களை அகற்றுகின்ற உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை எடுத்துச் சென்று உணவு சமைத்து கொடுத்துள்ளமை இந்து மக்களையும் மதத்தையும் அவமதிப்பதான ஒரு மிக மோசமான செயல்  இந்த செயலை ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை —ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம் Read More »

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின விழிப்புணர்வு செயலமர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இச் செயலமர்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ. அஸீஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி மற்றும் மனித உரிமைகள் அதிகாரி பிரியங்க விஜேநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின விழிப்புணர்வு செயலமர்வு Read More »

இலங்கைக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய இந்தியா

இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் முன்னணி வர்த்தக அமைப்பான NASSCOM இன் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார் தலைமையிலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவொன்று 2026 ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டது. 2026 ஜூலை 16 ஆம் திகதி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், இலங்கை தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக (Tech SMEs)

இலங்கைக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய இந்தியா Read More »

இம்ரான் மஹ்ரூப் எம் பியின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதான கோரிக்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பின்வரும் பிரேரனைகளை முன்வைத்தார். கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில்  முன்வைத்த திருகோணமலை மாவட்டத்தில் சமிஞ்சை விளக்குகள் (Traffic colour lights )பொறுத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர்  1. கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரம் மிகவேகமாக கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றது, இதில் தோணா பிரதேசத்திலிருந்து

இம்ரான் மஹ்ரூப் எம் பியின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதான கோரிக்கை Read More »

கிழக்கு ஆளுநர் UNDP பிரதிநிதிகள் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (15.07.2026) ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் சுகாதாரத் துறையில் மருத்துவக் கழிவுகளின் முகாமைத்துவத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான முறையில் வலுப்படுத்துவதற்கான திட்டத்தை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும் UNDP ஆகியவை

கிழக்கு ஆளுநர் UNDP பிரதிநிதிகள் சந்திப்பு Read More »

மட்டக்களப்பில் ‘MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை’ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களால் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை 15.07.2026 புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு குறித்த மருத்துவமனையைத் திறந்து வைத்தார். இதன் போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் Dr.எம்.ஏ.நபீல், கிழக்குப் பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் பீட குடும்ப மருத்துவப் பேராசிரியர்

மட்டக்களப்பில் ‘MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை’ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களால் திறந்து வைப்பு! Read More »