admin

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் மூன்று ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- ​திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் இறக்கக்கண்டி ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றத்தினால் (PSC) நிர்மாணிக்கப்பட்ட புதிய நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது. ​மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ . முகமம்து பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல சமூக ஆர்வலரும் கொடையாளருமான  திரு. ஜி. கந்தகுமார் அவர்களின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் மூன்று ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு Read More »

*தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணி நடமாடும் சேவை _பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பங்கேற்பு*

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் நீண்டகாலமாக நிலவி வந்த காணி சம்மந்தமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக காணி கச்சேரி நடமாடும் சேவை இன்று (20)தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா கலந்து கொண்டார். இதில் நீண்டகாலமாக நிலவி வந்த பொது

*தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணி நடமாடும் சேவை _பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பங்கேற்பு* Read More »

மூதூர் மாணவர்களின் நீண்டகால போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு: ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்!

பல வருடங்களாக போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த மூதூர் – இறால் குழி மற்றும் நாவலடி பகுதி மாணவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு இன்று உத்தியோகபூர்வ தீர்வு கிடைத்துள்ளது. பொதுமக்களும் பாடசாலை சமூகத்தினரும் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘சிசு செரிய’ (Sisu Seriya) பாடசாலை பஸ் சேவை இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இது வெறும் சாதாரண பஸ் சேவை மட்டுமல்லாது, அப்பகுதி மாணவர்களின் கல்விப்

மூதூர் மாணவர்களின் நீண்டகால போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு: ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்! Read More »

மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு தமிழ்நாடு ரோட்டரி கிளப் மூலம் புத்தகங்கள் வழங்‌க நடவடிக்கை: எம்.பி சிறிநாத்தின் முயற்சியில் சாதகமான முடிவு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப் (Rotary Club) பிரதானிகள் நேற்றைய தினம் 18.07.2026 மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பொது நூலகத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். ​மாநகர சபை முதல்வர் மற்றும் பொதுநூலக நிர்வாகிகளை நேரில் சந்தித்த இக்குழுவினர், அங்குள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். ​இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு ரோட்டரி கிளப்

மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு தமிழ்நாடு ரோட்டரி கிளப் மூலம் புத்தகங்கள் வழங்‌க நடவடிக்கை: எம்.பி சிறிநாத்தின் முயற்சியில் சாதகமான முடிவு! Read More »

இந்தியாவில் இலங்கை நீர்வள வளர்ப்புத் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கையின் தேசிய நீர்வள வளர்ச்சி அதிகார சபை (NAQDA)யைச் சேர்ந்த 10 நீர்வள வளர்ப்பாளர்கள் மற்றும் உதவி நீர்வள வளர்ப்பாளர்கள் இந்தியாவில் நடைபெற்ற விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு, நிலையான மீன்வள மேம்பாடு மற்றும் பிராந்திய அபிவிருத்தி முகாமைத்துவம் திறந்தான்  இரு நாடுகளின் உறுதியை வெளிப்படுத்துகிறது. NAQDA, இலங்கை அரசின் மீன்வளம், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் இயங்குகிறது. இந்த இரண்டு வாரப்

இந்தியாவில் இலங்கை நீர்வள வளர்ப்புத் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு Read More »

ஓய்வு பெற்றுச் சென்ற  பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற 4 உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்முனை  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அத்துடன் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் இருந்து சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற

ஓய்வு பெற்றுச் சென்ற  பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு Read More »

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது–  

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை  ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் இதுபற்றி தெரியவருவதாவது குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது–   Read More »

கிண்ணியா மாஞ்சோலை சியாரத் பள்ளிவாயலின் கந்தூரி

கிண்ணியா மாஞ்சோலை சியாரத் பள்ளிவாயலின் கந்தூரி (19) குறித்த பள்ளிவாசலின் நிருவாக சபையினர் தலைமையில் இடம்பெற்றது. அஸ்செய்யித் அப்துல் காதர் சூபி வலியுல்லாஹ் அவர்களின் 190 ஆவது வருட மௌலீது மனாகீப் மஜ்லிஸ் நிகழ்வும் 26ஆவது வருட சுனனுத் திர்மிதி ஹதீஸ் மஜ்லிஸ் தமாம் கந்தூரி வைபவமும் இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராக சங்கைக்குரிய ஷெய்குனா அஸ்செயித் யு. பி. முகம்மது ஆசிக் றிபாய் மௌலானா, சிறப்பு விருந்தினராக மௌலவி ஏ. எச். எம். அரூஸ்,

கிண்ணியா மாஞ்சோலை சியாரத் பள்ளிவாயலின் கந்தூரி Read More »

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்

பாறுக் ஷிஹான் சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான ‘சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்’ மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், சம்மாந்துறை தேர்தல்

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம் Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி: 10 கோல்களுடன் உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்கள் மிரட்சி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அசாத்தியமான கோல் மழை ஆட்டம் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மொத்தம் 10 கோல்கள் குவிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி ஆட்டத்தில், 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெலிங்ஹாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையிலும்,

வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி: 10 கோல்களுடன் உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்கள் மிரட்சி! Read More »