கிண்ணியா மாஞ்சோலை சியாரத் பள்ளிவாயலின் கந்தூரி (19) குறித்த பள்ளிவாசலின் நிருவாக சபையினர் தலைமையில் இடம்பெற்றது.
அஸ்செய்யித் அப்துல் காதர் சூபி வலியுல்லாஹ் அவர்களின் 190 ஆவது வருட மௌலீது மனாகீப் மஜ்லிஸ் நிகழ்வும் 26ஆவது வருட சுனனுத் திர்மிதி ஹதீஸ் மஜ்லிஸ் தமாம் கந்தூரி வைபவமும் இடம் பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக சங்கைக்குரிய ஷெய்குனா அஸ்செயித் யு. பி. முகம்மது ஆசிக் றிபாய் மௌலானா, சிறப்பு விருந்தினராக மௌலவி ஏ. எச். எம். அரூஸ், மௌலவி ஏ. எஸ். எம். பைசல் தலைமையிலும் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு மத ரீதியான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பொதுமக்கள், மகல்லா வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Views: 145




