• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • பொதுமக்களின் தாராள பங்களிப்பில் சம்மாந்துறைக்கு புதிய ஜனாஸா வாகனம் அர்ப்பணிப்பு!

பொதுமக்களின் தாராள பங்களிப்பில் சம்மாந்துறைக்கு புதிய ஜனாஸா வாகனம் அர்ப்பணிப்பு!

சம்மாந்துறை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நீண்ட நாள் அவசர தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்களின் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட புதிய ஜனாஸா வாகனம் (25) பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும், நிதிப் பங்களிப்பினாலும் இச்சேவை சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், பிரார்த்தனைகளுடன் ஜனாஸா வாகனத்தின் வெள்ளோட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ஒப்படைக்கப்பட்டது.

இப்பகுதியில் ஏற்படும் அவசர மற்றும் அத்தியாவசியமான ஜனாஸா போக்குவரத்து தேவைகளுக்கு இந்த வாகனம் பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பிக்கையாளர் சபையினர் தெரிவித்துள்ளனர். ஊர் மக்களின் ஒற்றுமைக்கும் சமூக சேவைக்கும் சான்றாக இந்த பணி அமைந்திருப்பதாக பிரதேசவாசிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Share the Post: