ஹஸ்பர் ஏ.எச்-
கிழக்கு மாகாணத்தில் கரையோர பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மதிப்பாய்வு மற்றும் கலந்துரையாடல் செயலமர்வு நேற்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
ACTED நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கரையோர பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம், மறுசுழற்சி வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த பொருள் மீட்பு நிலையங்கள் (MRF) தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகளின் முக்கிய கண்டறிதல்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும் பகுதிகள், மறுசுழற்சி சந்தை வாய்ப்புகள், MRF நிலையங்களின் செயற்பாட்டு மற்றும் நிதி சாத்தியக்கூறுகள், சுற்றாடல் பொருளாதார அமைப்பை வலுப்படுத்தல், கொள்கை மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பு, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாநகர சபையின் ஆணையாளர் யூ. சிவராஜா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் றியாத், ACTED நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூல் பலாஹ், சுழற்சி முறை பொருளாதார நிபுணர் த. விக்னேஸ் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.







