தமிழ் திரையுலகில் யதார்த்தமான கிராமியப் படைப்புகள் மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்குமுள்ள தமிழ் சினிமா இரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
‘என் இனிய தமிழ் மக்களே…’ – விடைபெற்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா!
தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்து வந்த ஈடுஇணையற்ற இயக்குநர் பாரதிராஜா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ’16 வயதினிலே’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட எண்ணற்ற காவியப் படைப்புகளைத் தந்த மாபெரும் கலைஞனின் மறைவு, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது மறைவுக்குத் திரை உலகினரும் இரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




