தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் வருடாந்த சுற்றுநிருபத்திற்கு அமைய, “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிலான முதலாவது கலந்துரையாடல் அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் கடந்த ஜூன் 03ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 3.00 மணிக்கு இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. பஸ்மிலா மற்றும் விடய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சபீலா அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், பொது நூலகங்களின் நூலகர்களான ஏ.ஆர்.எம். இல்யாஸ், யு.எல்.எம். முஹிதீன், ஐ.எல்.எம். நஸீம் ஆகியோருடன் ஏனைய நூலகப் பொறுப்பாளர்களும் சமூகமளித்திருந்தனர்.
இவ்வமர்வின் போது, தேசிய வாசிப்பு மாதத்திற்கான விசேட செயற்குழுவை அமைப்பது மற்றும் அதற்கான செயற்திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், திட்டமிடப்படும் அனைத்துப் பணிகளும் புதிதாக அமைக்கப்படும் இந்தச் செயற்குழுவின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற முக்கிய தீர்மானமும் இதன்போது எட்டப்பட்டது.









