முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையான நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்கு நாற்காலிகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த விலையைக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காமல், தமக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் அரசிற்கு சுமர் 7.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Share the Post: