• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கொழும்பில் லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்: 7 முக்கிய வழித்தடங்களில் 100 புதிய பஸ்கள் இயக்கம்!

கொழும்பில் லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்: 7 முக்கிய வழித்தடங்களில் 100 புதிய பஸ்கள் இயக்கம்!

கொழும்பு: மேல் மாகாண பொதுப் போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட ‘லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட்’ (LMT) நிறுவனத்தின் நவீன சொகுசு பஸ் சேவைகள் செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாகத் தங்கள் இயக்கத்தைத் தொடங்குகின்றன.

இச்சேவைகளுக்காகத் தலங்கம மெட்ரோ டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 20 தாழ்தள (Low Floor) சொகுசு பஸ்கள் பேலியகொட பஸ் முனையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 100 புதிய பஸ்களைப் பயன்படுத்தி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய 7 வழித்தடங்களில் இச்சேவை விரிவாக்கப்படவுள்ளது.

Share the Post: