மன்னார் சின்னக்கடை குப்பை சேகரிப்பு பகுதியில் பாரிய தீ விபத்து!

மன்னார் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள சின்னக்கடை குப்பை சேகரிப்பு வளாகத்தில் இன்று பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இத்தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டதோடு, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் புகை பரவியதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகர சபைப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: