கடும் வறட்சியால் 72,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் ஸ்தம்பிதம்!
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குத் தாங்கி ஊர்திகள் (Bowser) மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக அனுராதபுரம் – நாச்சதூவ குளம் முழுமையாக வற்றிப்போயுள்ளது.









