32 வருடகால தொழினுட்பக் கல்விச் சேவையிலிருந்து அதிபர் ச.தியாகராசா ஓய்வு!

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையில் (SLTES-1) நீண்டகாலம் சேவையாற்றிய மூத்த அதிகாரியும் சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் அதிபருமான ச.தியாகராசா அவர்கள் 32 வருடகால புகழ்பெற்ற அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தொழினுட்பக் கல்வித்துறையின் மிகவுயர்ந்த பதவியான SLTES-1 தரத்தில் நீண்டகாலம் பணியாற்றிய பெருமை இவரைச் சாரும்.

சேவைப் பாதை:

  • 1994: மட்டக்களப்பு தொழினுட்பக் கல்லூரியில் பட்டதாரி பயிலுனராக அரச சேவையில் இணைந்தார்.
  • 1995: உதவி போதனாசிரியராகக் கடமையாற்றினார்.
  • 1999: இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவை (வகுப்பு 3) அதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றார்.

தனது 32 வருடகாலப் பணியில் மட்டக்களப்பு தொழினுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர், அக்கரைப்பற்று தொழினுட்பக் கல்லூரியின் அதிபர், அம்பாறை ஹாடி தொழினுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர், சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கல்வித் தகைமைகள்: இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டத்தையும் (BBA), திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விக்கான பட்டப்பின் டிப்ளோமாவையும் (PGDE), ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MMgt) பெற்றுள்ளார். அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் (Dip in Journalism) நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post: