உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்காக ஈரானினால் முன்வைக்கப்பட்ட 7 நாட்கள் அமைதி உடன்படிக்கை முன்மொழிவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பதற்றமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதன்படி, சந்தை நிலவரப்படி:
- WTI ரக கச்சா எண்ணெய்: பீப்பாய் ஒன்றின் விலை 1.08% உயர்ந்து 93.47 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
- BRENT ரக கச்சா எண்ணெய்: பீப்பாய் ஒன்றின் விலை 1.60% உயர்வடைந்து 105 அமெரிக்க டொலர்களைக் கடந்து பதிவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை நீடிப்பதனால், உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Post Views: 11




