• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • பீகாரில் பெருஞ்சோகம்: ஒரே படுக்கையில் உறங்கிய இரு சிறுமிகள் விஷப்பாம்பு தீண்டித் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு!

பீகாரில் பெருஞ்சோகம்: ஒரே படுக்கையில் உறங்கிய இரு சிறுமிகள் விஷப்பாம்பு தீண்டித் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஒரே படுக்கையில் ஒன்றாகக் கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருந்த இரு சிறுமிகள் விஷப்பாம்பு தீண்டியதில் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வழமை போல் காலையில் குழந்தைகளை எழுப்புவதற்காக அவர்களின் பெற்றோர் அறைக்குச் சென்றுள்ளனர். இதன்போது, நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் எழும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களின் உடல் நீல நிறமாக மாறியிருப்பதைக் கண்டு உறைந்து போயுள்ளனர்.

என்ன நடந்தது என்று புரியாமல் தவித்த பெற்றோர், பிள்ளைகள் படுத்திருந்த படுக்கையைச் சோதித்தபோது, அங்கே கொடிய விஷப் பாம்பொன்று சுருண்டு கிடப்பதைக் கண்டு அலறியடித்துள்ளனர்.

இரவு நேரத்தில் படுக்கையறைக்குள் புகுந்த அந்த விஷப் பாம்பு, ஆழமான உறக்கத்தில் இருந்த சிறுமிகள் இருவரையும் அடுத்தடுத்து தீண்டியுள்ளது. பாம்பு தீண்டியதை அறியாமல் சிறுமிகள் உறங்கிய நிலையில், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதன் காரணமாகவே அவர்கள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சாதாரண இரவில், பெற்றோரைக் கட்டிப்பிடித்து உறங்கச் சென்ற இரு பிஞ்சுகளின் உயிரைக் கொடிய பாம்பு பறித்துச் சென்றுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share the Post: