September 2, 2026

பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் வலிகாமம் தென்மேற்கு பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதிப் பங்களிப்புடன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் சண்டிலிப்பாய் பிரான்பற்று அருள்முதீஸ்வரி திருமண மண்டபத்தில் “அண்ணாவியார் கலாபூஷணம் சிங்கராயர் செபமாலை” அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக கலாசார பேரவையின் போஷகரும் முன்னாள் அதிபருமான திரு. வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்துக்கொண்டனர். பண்பாட்டுப் பேரணி, மங்கள விளக்கேற்றல் மற்றும் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான விழாவில், மாணிப்பாய் கலைக்கோவில் மாணவிகளின் நாட்டிய நிகழ்வு, பாரம்பரிய இசைச் சங்கமம், சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வு, சிவலிங்க தற்காப்புக் கலை மன்றத்தின் சிலம்பாட்டம், சண்டிலிப்பாய் அம்பாள் கலைமன்றத்தின் “காத்தவராயன் சிந்துநடைக் கூத்து” அரங்கேற்றப்பட்டதோடு, பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. விழாவின் முக்கிய அம்சமாக, வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு நீண்டகாலமாகப் பங்களிப்பு செய்த மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன், கலைமன்றங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. பிரதேசத்தின் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு மரபுகள் மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் வலிகாமம் தென்மேற்கு பண்பாட்டுப் பெருவிழா Read More »

வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 10 பயனாளர்களுக்கு 15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு நிருபர்வி.சுகிர்தகுமார்      வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 30 தெரிவு செய்யப்பட்ட அசுவெசும குடும்பங்களுக்கான 45 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.இதன் ஒரு கட்டமாக 10 பயனாளர்களுக்கு 15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சிவப்பிரியா சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் த.பரமானந்தம் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.பிரதேச செயலாளர்

வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 10 பயனாளர்களுக்கு 15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read More »

திருகோணமலை புனித மரியாள் கல்லூரி அகில இலங்கைக்குள் முப்பத்திரண்டு பாடசாலைக்குள் தெரிவு.!

2026 ம் ஆண்டுக்கான சிறந்த விவாதிகளுக்கான போட்டியானது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலையாக புனித மரியாள் கல்லூரி அகில இலங்கைக்குள்  முப்பத்திரண்டு பாடசாலைக்குள்  தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பினை வழங்கிய பாடசாலை அதிபரான அருட்சகோதரி ரெஜினா கவிதா மற்றும் பொறுப்பாசிரியராக கடமையாற்றிய ஆர்.ஆர் .ஜனகன் ஆசிரியரையும் பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது

திருகோணமலை புனித மரியாள் கல்லூரி அகில இலங்கைக்குள் முப்பத்திரண்டு பாடசாலைக்குள் தெரிவு.! Read More »

மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சனைக்கு அமைச்சர் நிரந்தர தீர்வு –நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு

( (கனகராஜா சரவணன்) தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான

மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சனைக்கு அமைச்சர் நிரந்தர தீர்வு –நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு Read More »

இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்!

இலங்கை கலைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா (64) நேற்று இரவு (செப்டம்பர் 01) காலமானார். நீண்டகாலமாக சிறுநீரகப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கையின் முன்னணிப் பாடகரான ஜே. ஏ. மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, தனது தந்தை வழியில் இசையுலகில் தடம் பதித்து பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்ட சிங்களத் திரைப்படங்களில் நடிகராகவும் பணியாற்றி கலைத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை

இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்! Read More »

வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும். அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம் – ——————— வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது  அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. இதனால் மூன்று வேளை உணவு உண்பதில்

வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும். அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை Read More »

கொக்கட்டிச்சோலையில் பெரிய வாளிக்குள்  வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

(  (கனகராஜா சரவணன் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது  8 மாதங்களுமான  குழந்தையொன்று வாளிக்குள் நீரில் மூழ்கி வீழ்ந்த   நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி

கொக்கட்டிச்சோலையில் பெரிய வாளிக்குள்  வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு Read More »

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

பாறுக் ஷிஹான்தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1)  உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் ஆன்ம சாந்திக்காக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சர்வமத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் பொலிஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, வீரமரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா Read More »

நற்பிட்டிமுனையின் முதலாவது பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய மைல்கல்லாக, அந்நிலத்தின் முதலாவது பெண் வைத்தியராக வைத்தியர் மஃமூது பாத்திமா ஷிரீன் (Dr. Fathima Shirin) சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு நற்பிட்டிமுனையின் முதலாவது ஆண் வைத்தியராக வைத்தியர் எம்.சி. மாஹிர் தெரிவு செய்யப்பட்டு, காலி ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுச் சேவையாற்றத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து பலர் மருத்துவத் துறைக்குச் சென்றபோதிலும்,

நற்பிட்டிமுனையின் முதலாவது பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன் Read More »

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு

பாறுக் ஷிஹான் அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசாவில் இடம்பெற்றது. வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு Read More »