மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கல் — நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு—
((கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. அதேவேளை அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுமாறு வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், வீடமைப்பு,





