ஆலையடிவேம்பு நிருபர்வி.சுகிர்தகுமார்
வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 30 தெரிவு செய்யப்பட்ட அசுவெசும குடும்பங்களுக்கான 45 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதன் ஒரு கட்டமாக 10 பயனாளர்களுக்கு 15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சிவப்பிரியா சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் த.பரமானந்தம் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் வாழ்வாதார பொருட்களை மக்களிடம் கையளித்ததுடன் அரசாங்கம் முன்னெடுத்துவரும் இச்சிறப்பான வேலைத்திட்டத்தை மக்கள் சரியாக பயன்படுத்தி வாழ்வில் உயர்வடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இவ்வருடம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அசுவெசும இலக்கு குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின்படி 30 குடும்பங்கள் இவ்வாறு வாழ்வாதார வேலைத்திட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





