இலங்கை கலைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா (64) நேற்று இரவு (செப்டம்பர் 01) காலமானார்.
நீண்டகாலமாக சிறுநீரகப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் முன்னணிப் பாடகரான ஜே. ஏ. மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, தனது தந்தை வழியில் இசையுலகில் தடம் பதித்து பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்ட சிங்களத் திரைப்படங்களில் நடிகராகவும் பணியாற்றி கலைத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இவர் பிரபல சிங்களத் திரைப்பட நடிகை தில்ஹானி ஏகநாயக்கவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு இலங்கையின் கலை உலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்
Views: 55




