August 22, 2026

பாயில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரி பல்லேகம ஹேமரதன தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

அனுராதபுரம் அட்மிரல்டீ பகுதி அல்லது வணக்கத்திற்குரிய ஸ்ரீ மகா போதியின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணையின்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முக்கியமான அறிவியல் சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை எதிர்வரும் தவணையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாயில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரி பல்லேகம ஹேமரதன தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு Read More »

மொனராகலை கும்புக்கனவில் கொடூர விபத்து: உழவு இயந்திரத்தில் பயணித்த ஐவர் பலி; மூவர் படுகாயம்

மொனராகலை (21 ஆகஸ்ட் 2026) — இன்று அதிகாலை மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தொன்றில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன கல்கம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெல்லவாயை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் பத்து பேர்

மொனராகலை கும்புக்கனவில் கொடூர விபத்து: உழவு இயந்திரத்தில் பயணித்த ஐவர் பலி; மூவர் படுகாயம் Read More »

எதிர்வரும் காலத்தில் மக்கள் விரும்பிய வாகனங்களைப் பயன்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜித்த ஹேரத்

இலங்கை மக்கள் தாங்கள் விரும்பும் வாகனத்தைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தக்கூடிய சூழல் விரைவில் உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Motor Rally 2026” வாகனக் கண்காட்சி பேரணியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: எதிர்வரும் காலத்தில் நாட்டின் வாகனச் சந்தை வழமைக்குத் திரும்பி, பொதுமக்கள் தமக்கு விருப்பமான வாகனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு முழுமையாகக்

எதிர்வரும் காலத்தில் மக்கள் விரும்பிய வாகனங்களைப் பயன்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜித்த ஹேரத் Read More »

இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்து

ஹஸ்பர் ஏ ஹலீம் – இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று (22) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இடம் பெற்றன. இதில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனைவின் நான்காவது வருட அணி திரளல் நிகழ்வாக இது காணப்படுகிறது  இலங்கையின்

இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்து Read More »

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக்கழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் இன்னும் நீண்ட காலம் தொடர்ந்திருக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு Read More »

மறைந்த கலாநிதி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இலங்கை இசைத்துறையின் முன்னணிப் பாடகியும் கலாநிதியுமான நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அவர்கள் நேற்று (21) இரவு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். கொழும்பில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, மறைந்த பாடகியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இலங்கை சிங்கள இசை உலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு, நாட்டின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மறைந்த கலாநிதி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாள் திருவிழா பக்திப் பெருக்கோடு நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாள் திருவிழா பக்திப் பெருக்கோடு நடைபெற்றது. Read More »

விக்டோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுகமும் மரக்கன்று நடுதலும்

கல்முனை விக்டோரியஸ் (Victorious SC) கடின பந்து கிரிக்கெட் கழகத்தின் புதிய உத்தியோகபூர்வ சீருடை (T-shirt/Jersey) அறிமுக விழா நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் A.M. ரியாஸ் பெஸ்டர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய மேலங்கிகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு கழக வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கல்முனை சந்தாங்கேணி மைதான வளாகத்தில் பசுமையை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளும் நட்டப்பட்டன. இந்நிகழ்வில் Ramzeer கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும்

விக்டோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுகமும் மரக்கன்று நடுதலும் Read More »

இலங்கையின் 40 சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்கான இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஹஸ்பர் ஏ ஹலீம் – இலங்கையைச் சேர்ந்த 40 சிவில் சேவை உத்தியோகத்தர்கள், “அனர்த்த முகாமைத்துவம்” தொடர்பான விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சியில் இந்தியாவின் நல்லாட்சி தேசிய நிலையத்தில் (NCGG) கலந்துகொண்டனர். இப்பயிற்சி நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி நிறைவடைந்தது. “அனர்த்த முகாமைத்துவம்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட ஐந்தாவது சிறப்புப் பயிற்சியான இந்நிகழ்ச்சி, அனர்த்த முன்னாயத்தம், அவசரகாலப் பதிலளிப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய திறனை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள

இலங்கையின் 40 சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்கான இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி Read More »

சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக நிர்வகிக்க புதிய வேலைத்திட்டம்

இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முறையாக நிர்வகித்து, சுறா இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அண்மையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித கமல் ஜினதாச தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கையின் பலநாள் மீன்பிடிப் படகுகளில் சுறா மீன்கள் பிரதான பிடிப்புடன் இணைந்த இடைப்பிடிப்பாக (By-catch) பிடிக்கப்படுகின்றன. சுறா மீன்களின் துடுப்புகள், செவுள்கள், தாடைகள் மற்றும் தோல்கள் உள்ளிட்ட பகுதிகளும், உயிருள்ள அலங்கார சுறா இனங்களும் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் நாட்டிற்கு கணிசமான அளவு அந்நியச் செலாவணி கிடைத்து வருகின்றது. எனினும், உலகளவில் பல சுறா இனங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், இத்தொழிலை சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக பொறுப்புடன் நிர்வகிப்பது அவசியமானது என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. இதற்கமைய, நாட்டில் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சுறா இனங்களைப் பாதுகாப்பதுடன், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட சுறா இனங்களை மாத்திரம் ஏற்றுமதி செய்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலநாள் மீன்பிடிப் படகுகளில் பிடிக்கப்படும் ஒவ்வொரு சுறா மீனும் பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து இறுதி நுகர்வோர் வரை சென்றடையும் பாதையைத் துல்லியமாகக் கண்காணிக்கக்கூடிய வகையில் முறையான தரவு சேகரிப்பு மற்றும் தடமறிதல் (Traceability) முறைமையொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுறா மீன்களின் பிடிப்பு, பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான தகவல்களை முறையாகப் பதிவு செய்து கண்காணிக்க முடியும். மேலும், தற்போது ஏற்றுமதி செய்யப்படும் சுறா மீன் பாகங்கள் மற்றும் குறிப்பாக உயிருள்ள அலங்கார சுறா மீன்களின் ஏற்றுமதி அளவை மேலும் அதிகரிக்காமல், தற்போதுள்ள மட்டத்திலேயே கட்டுப்படுத்திப் பேணுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகம் (NARA), சுறா மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, விரிவான சுறா மீன் முகாமைத்துவத் திட்டமொன்றை தயாரிக்கவுள்ளது. குறித்த முகாமைத்துவத் திட்டத்தை இந்த வருட இறுதிக்குள் தயாரித்து சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் மற்றும் NARA ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த புதிய வேலைத்திட்டத்தின் மூலம், இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும், சர்வதேச சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாகவும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுகிறது. இக்கலந்துரையாடலில் NARA நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக நிர்வகிக்க புதிய வேலைத்திட்டம் Read More »