மறைந்த கலாநிதி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இலங்கை இசைத்துறையின் முன்னணிப் பாடகியும் கலாநிதியுமான நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அவர்கள் நேற்று (21) இரவு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, மறைந்த பாடகியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை சிங்கள இசை உலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு, நாட்டின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

Share the Post: