கல்முனை விக்டோரியஸ் (Victorious SC) கடின பந்து கிரிக்கெட் கழகத்தின் புதிய உத்தியோகபூர்வ சீருடை (T-shirt/Jersey) அறிமுக விழா நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் A.M. ரியாஸ் பெஸ்டர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய மேலங்கிகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு கழக வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கல்முனை சந்தாங்கேணி மைதான வளாகத்தில் பசுமையை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளும் நட்டப்பட்டன. இந்நிகழ்வில் Ramzeer கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும் இணைந்து கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.




Post Views: 34




