பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது: அதிர்ச்சியில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி
பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார். இச் சம்பவம் தொடர்பில்








