• Home
  • உலகச் செய்திகள்
  • *கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊடான சந்திப்பு 

*கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊடான சந்திப்பு 

ஹஸ்பர் ஏ ஹலீம் 

கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ (Kazumi Kubo) மற்றும் செயல்பாட்டு இணைப்பு உதவியாளர் திருமதி நதீகா சமரக்கொடி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று (18) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, அண்மைக் காலங்களில் கனடாவிற்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத புலம்பெயர்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பானதும் சட்டபூர்வமானதுமான புலம்பெயர்வின் அவசியம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சோ. இளங்கீரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share the Post: