கொழும்பில் 2,000-க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் 12வது சர்வதேச யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது
ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூன் 21 அன்று, கொழும்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர சதுக்கத்தில் (Independence Square) 12வது சர்வதேச யோகா தினம் (International Day of Yoga – IDY) மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயமும் அதன் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்த கலாச்சார மையமும் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சும் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இவ்வாண்டின் கருப்பொருளான “ஆரோக்கியமான





