மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திக்கோடை – தும்பாலை பகுதியிலுள்ள வயல் நிலமொன்றில் இருந்து நேற்று (20.06.2026) சனிக்கிழமை யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானையின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட வயல் நிலத்தின் உரிமையாளரிடம் வெல்லாவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Views: 213




