• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • எரிபொருள் விற்பனையில் அரசுக்கு லாப நோக்கம் இல்லை: ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மக்களுக்கு நிம்மதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எரிபொருள் விற்பனையில் அரசுக்கு லாப நோக்கம் இல்லை: ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மக்களுக்கு நிம்மதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

உலகச் சந்தையில் தற்போதைய எரிபொருள் விலை இதே மட்டத்தில் நீடித்தால், அதன் பலன்களை எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

தற்போதைய நிலைவரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தற்போதே ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

சாதாரண சந்தையொன்றில் பொருட்களை வாங்குவதைப் போல, எரிபொருளை உடனடியாகக் கொள்வனவு செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய அமைச்சர், முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றி, உடன்படப்பட்ட விலையிலேயே எரிபொருள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Share the Post: