May 28, 2026

கிண்ணியாவில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

ஹஜ் பெருநாள் தினமான இன்று (28) கிண்ணியா குறிஞ்சாக்கேணி VC மைதானத்திலும்  ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது. பெருமளவானவர்கள் இதில் கலந்து கொண்டதுடன் தொழுகை முடிந்தவுடன் அன்பு,பாசம்,கருணை போன்றவற்றை வெளிப்படுத்தும் முகமாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கைலாகு கொடுத்து முஸாபகா செய்து கொண்டனர். இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களும் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கிண்ணியாவில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை Read More »

செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  இன்று   கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில்  கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும்  குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில்

செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு Read More »

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு —

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று  வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு  வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில்  20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டு திருப்பெருந்துறை, 04வது குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய  கதிர்செல்வன் பரமநாதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விமானபடை

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு — Read More »

கிழக்கு மாகாணத்தில் கரையோர பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மதிப்பாய்வு மற்றும் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்- கிழக்கு மாகாணத்தில் கரையோர பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மதிப்பாய்வு மற்றும் கலந்துரையாடல் செயலமர்வு நேற்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. ACTED நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கரையோர பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம், மறுசுழற்சி வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த பொருள் மீட்பு நிலையங்கள்

கிழக்கு மாகாணத்தில் கரையோர பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மதிப்பாய்வு மற்றும் கலந்துரையாடல் Read More »

தேசிய வெசாக் விழா 2026-இன் போது ‘இந்தியாவின் புத்த பாரம்பரியம்’ குறித்த சிறப்பு கண்காட்சி ஏற்பாடு

ஹஸ்பர் ஏ.எச்- இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதரகம், மாத்தறை மிடெல்லவெல புராண விகாரையுடன் இணைந்து, தேசிய வேசாக் விழா 2026-இன் ஒரு பகுதியாக ‘இந்தியாவின் புத்த பாரம்பரியம்’ என்ற தலைப்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தன. 2020 செப்டம்பர் மாதத்தில், இரு நாடுகளுக்குமிடையிலான புத்த உறவுகளை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்தது. அந்த உதவித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முக்கியமான திட்டங்களில்

தேசிய வெசாக் விழா 2026-இன் போது ‘இந்தியாவின் புத்த பாரம்பரியம்’ குறித்த சிறப்பு கண்காட்சி ஏற்பாடு Read More »

 பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் திடீர் பரிசோதனை.

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில் இன்று பரிசோதனை செய்யப்பட்டன. கிடைக்கப்பெற்ற  முறைப்பாடு தொடர்பாக இத் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இந்த பரிசோதனையின் போது பெண்கள் சந்தையில் எந்த ஒரு குறைபாடு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வியாபாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்   பொதுச்

 பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் திடீர் பரிசோதனை. Read More »