May 16, 2026

கொமர்ஷல் வங்கியில் கொழும்பில் பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு: தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்!

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி (Commercial Bank), கொழும்பில் உள்ள தங்களது சில்லறை விற்பனைக் குழுவில் (Retail Sales Team) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான இருபால் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. பதவி: * சில்லறை விற்பனை உதவியாளர் (Retail Sales Associate – Fixed Term Contract) விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொமர்ஷல் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

கொமர்ஷல் வங்கியில் கொழும்பில் பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு: தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்! Read More »

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் இன்று திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை கட்டிடம், புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிகும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் இலங்கை வங்கி கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருவாளர் ஏ.சி.மகவந்த தலைமையில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. நாவிதன்வெளி அன்னமலை பிரதான வீதியில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பிரதேசத்தின் ஒரே ஒரு வங்கி சேவையாக இயங்கி

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் இன்று திறந்து வைப்பு Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல்!

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் “பல்கலைக் கழகமாக” 1996.05.15ஆம் திகதி  பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு 2026.05.15ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.  “Pearl Jubilee Anniversary” எனப் பெயரிடப்பட்ட இம்முத்து விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் முப்பது ஆண்டுகால பணிச்சேவையையும் நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வு ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல்! Read More »

கோப்புகள் கையாடல் மூலம் பல மில்லியன் ரூபா மோசடி: சம்பத் வங்கி பணியாளர்கள் 9 பேர் கைது.!!

பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒரு கடனாளியின் கடன் தொகையை உயர்த்தி, பல மில்லியன் ரூபா அளவிலான மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கண்டி பகுதியில் உள்ள சம்பத் வங்கி கிளையின் பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் மேலாளர் உட்பட 9 பணியாளர்கள் கண்டி பொலிஸின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, குறித்த வங்கியிலிருந்து ரூ.35 மில்லியன் கடன் பெற்ற ரஞ்சித் சந்திரசிறி என்ற தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்

கோப்புகள் கையாடல் மூலம் பல மில்லியன் ரூபா மோசடி: சம்பத் வங்கி பணியாளர்கள் 9 பேர் கைது.!! Read More »

காத்தான்குடியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்: டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு

காத்தான்குடி: மட்டக்களப்பு – காத்தான்குடி டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், அவசரத் தேவைக்கான மாபெரும் இரத்ததான முகாமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) நடத்தப்படவுள்ளது. புதிய காத்தான்குடி நூராணியா ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்கள் சமூகமளித்து தங்களது குருதிக் கொடையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதநேயப் பணியில் பெண் சகோதரிகளும் எவ்விதத் தயக்கமுமின்றிப் பங்கெடுக்கும் வகையில், அவர்களுக்காகப்

காத்தான்குடியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்: டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு Read More »

ஜனாதிபதியின்    விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை(15)  ஜனாதிபதி செயலக அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி ஆணையாளர், இலங்கை பொலிஸ் ஐயர்

ஜனாதிபதியின்    விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம் Read More »

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை துரிதப்படுத்த ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும்.!

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வலியுறுத்துகிறது பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது. சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்  அண்மையில் நடைபெற்ற போது அதன் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.எம்.

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை துரிதப்படுத்த ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும்.! Read More »

கிளிநொச்சியில் பகல் வேளையில் ‘விளையாட்டு காட்டிய’ இளம் தம்பதி பொலிஸாரிடம் சிக்கினர்: 9 வீடுகளில் கைவரிசை!

புருசனும் பெண்டாட்டியுமாகச் சேர்ந்து இந்தளவுக்கு அட்டகாசம் செய்திருக்கிறீங்க!” என்று ஊரே பேசும் அளவுக்கு, கிளிநொச்சியில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதியினரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில வாரங்களாகவே பெரும் அச்சத்தில் இருந்தனர். மக்கள் வேலைகளுக்குச் சென்ற வேளையில், பூட்டப்பட்டிருந்த வீடுகளைக் குறிவைத்து நகைகளும் பெறுமதியான பொருட்களும் மர்மமான முறையில் திருடப்பட்டு வந்தன. ஏதோ ஒரு

கிளிநொச்சியில் பகல் வேளையில் ‘விளையாட்டு காட்டிய’ இளம் தம்பதி பொலிஸாரிடம் சிக்கினர்: 9 வீடுகளில் கைவரிசை! Read More »

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச்  சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர்  பிரியங்கரவுக்குக்   ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. குறித்த தகவலின் அடிப்படையில்    இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன்  3,60,000 மில்லி

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு Read More »

மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அபதாரம் 14 நாட்களுக்கு சீல் வைப்பு —

(கனகராஜா சரவணன்)) மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  உணவக உரிமையாளரை     50 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறும் 14 நாட்களுக்கு உணவகத்தை மூடி சீல் வைக்குமாறு வெள்ளிக்கிழமை (15) கட்டளை பிறப்பித்ததையடுத்து குறித்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது– .குறித்த உணவகத்தை மட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி மனித

மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அபதாரம் 14 நாட்களுக்கு சீல் வைப்பு — Read More »