May 14, 2026

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல் எனும் கருப் பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல் Read More »

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோவதுடன் கையூட்டு பெறுகிறார்களா?

மட்டகக்ளப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை (13) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, பிரதேச சபை தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, உபதவிசாளர் த.டிசாந், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோவதுடன் கையூட்டு பெறுகிறார்களா? Read More »

மட்டு சிறையில் இருந்து தண்டனை பெற்ற கைதி தப்பி ஓட்டம்

(கனகராஜா சரவணன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14) தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது மொறக்கட்டாஞ்சேனை  தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பத்மராஜா டினேஸ் என்ற சிறைக்கைதி    வேறு நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாக  கைது செய்யப்பட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது இந்த நிலையில்  சம்பவ தினமான இன்று காலை     சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை  சிறைச்சாலைக்கு வெளியில் கட்டுமானப்பணியில்

மட்டு சிறையில் இருந்து தண்டனை பெற்ற கைதி தப்பி ஓட்டம் Read More »

இந்தியாவின்  ஜ.என்எஸ். கடற்படை கப்பல் இலங்கை வருகிறது 

கனகராஜா சரவணன்) இந்தியக் கடற்படையின் ‘நட்புறவுப் பாலங்களை’ (Bridges of Friendship) உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தியக் கடற்படைக் கப்பலான சுனைனா (INS Sunayna), ‘IOS சாகர்’ எனும் பெயரில் கொழும்பு துறைமுகத்தை நாளை (15) வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினர் (Multinational crew) இடம்பெற்றுள்ளனர். இந்த வரிசைப்பயணத்தின் (Deployment) இரண்டாவது பதிப்பில், ஐ.என்.எஸ் சுனைனா மேற்கொள்ளும் ஏழாவது துறைமுக அழைப்பு (Port call) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின்  ஜ.என்எஸ். கடற்படை கப்பல் இலங்கை வருகிறது  Read More »

கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்ல சதி: ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ துப்பாக்கிகளுடன் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்ட மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து அதிநவீன ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்: கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகர, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில்

கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்ல சதி: ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ துப்பாக்கிகளுடன் கைது! Read More »

நுவரெலியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை, அதற்காக ஒதுக்கிய இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் – ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) முற்பகல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கான

நுவரெலியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Read More »

ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 720 ரூபாய்: அதிரவைத்த ஜனாதிபதி!

இலங்கையில் எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. நுவரெலியாவில் நடைபெற்ற முக்கிய கூட்டமொன்றில் அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். முக்கிய அம்சங்கள்: அரசாங்கத்தின் அடுத்த கட்டம் என்ன? நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டுமானால், எரிபொருள் பாவனையை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. மானியங்கள் குறைக்கப்படலாமா அல்லது விலை சூத்திரம் மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. “உண்மையான விலையை மறைத்து நீண்ட

ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 720 ரூபாய்: அதிரவைத்த ஜனாதிபதி! Read More »

மன்னார் மண்ணின் பெருமை: இலங்கை மகளிர் ‘ஏ’ கிரிக்கெட் அணியில் சதிஸ்க்குமார் சயந்தினி தெரிவு!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை சதிஸ்க்குமார் சயந்தினி, இலங்கை தேசிய மகளிர் ‘ஏ’ (Sri Lanka Women’s A Team) கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் சயந்தினி உள்வாங்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்திலிருந்து தேசிய மட்டத்திலான கிரிக்கெட் அணிக்கு வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும். யுத்தம் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளைத் தாண்டி, தனது விடாமுயற்சியால்

மன்னார் மண்ணின் பெருமை: இலங்கை மகளிர் ‘ஏ’ கிரிக்கெட் அணியில் சதிஸ்க்குமார் சயந்தினி தெரிவு! Read More »

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் பயிற்சி கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் சனிக்கிழமை(09.05.2026) இடம்பெற்றது. இலங்கையில் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் அம்மன் மகளிர் இல்ல பௌன்டேஷன் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளை கிழக்கு

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி Read More »

சாய்ந்தமருது எல்லை நிர்ணயம் இடம்பெறவுள்ள நிலையில் காரைதீவு பிரதேச சபை எல்லை தெளிவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் : காரைதீவு உப தவிசாளர் இஸ்மாயில்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது நகர சபை சம்பந்தமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு விரைவில் எல்லை நிர்ணயம் செய்யப்பட உள்ள சூழ்நிலையில் சாய்ந்தமருதின் அயல் பிரதேசமாக உள்ள காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு எல்லையை சரியான முறையில் அடையாளப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் பிரதேச சபையில் முன்மொழிவொன்றை இன்று முன்வைத்தார். காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 11வது மாதாந்த சபைக்

சாய்ந்தமருது எல்லை நிர்ணயம் இடம்பெறவுள்ள நிலையில் காரைதீவு பிரதேச சபை எல்லை தெளிவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் : காரைதீவு உப தவிசாளர் இஸ்மாயில் Read More »